பிரபு நடிக்கும் "ராஜபுத்திரன்" பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!


தினத்தந்தி 4 April 2025 3:32 PM IST (Updated: 4 April 2025 5:17 PM IST)
t-max-icont-min-icon

பிரபு நடிக்கும் "ராஜபுத்திரன்" படத்தின் முதல் பாடலான 'உம்மா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

இளைய திலகம் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் பிரபு. இவர் 1980 காலகட்டங்களில் இருந்து தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். தற்போது இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கவின் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரபு. மேலும் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய படம் ஒன்றிலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் பிரபு, 'ராஜபுத்திரன்' எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது கதாநாயகனாக நடித்து வரும் வெற்றிக்கு தந்தையாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து கிருஷ்ண பிரியா, ஆர்.வி உதயகுமார், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், தங்கதுரை, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை மகா கந்தன் எழுதி இயக்கியிருக்கிறார். ஆலிவர் டெனி இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ஐஸ் நவ்பால் ராஜா இதற்கு இசையமைத்திருக்கிறார்.

கிராமத்துக் கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடலான 'உம்மா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை மோகன் ராஜன் வரிகளில் டி.ராஜேந்தர் பாடியுள்ளார்.

1 More update

Next Story