கடந்த காலத்தை நினைவு கூர்ந்த நடிகர் பிரசாந்த்

நடிகர் பிரசாந்த் 'அந்தகன்' படத்தை திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் பார்த்துள்ளார்.
Actor Prashant remembers the past
Published on

சென்னை,

நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது 'அந்தகன்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சில சிக்கல்களால் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்த 'அந்தகன்' திரைப்படம் நேற்று (ஆகஸ்ட் 9) திரையரங்குகளில் வெளியானது.

கிரைம் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இப்படம் தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் பிரசாந்த் ரசிகர்களுடன் 'அந்தகன்' படத்தை திரையரங்கிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். அவர் கூறுகையில்,

'மீண்டும் கமலா தியேட்டருக்கு வந்தது சந்தோஷமாக உள்ளது. 'வைகாசி பொறந்தாச்சு' படத்தில் நடித்தபோது முதல்முறையாக இந்த திரையரங்கில்தான் என் முகத்தை பெரிய திரையில் பாத்தேன். தற்போது மீண்டும் 'அந்தகன்' படத்தை காண இங்கு வந்துள்ளேன். வாழ்க்கை ஒரு வட்டம்,' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com