'எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து...'- இயக்குனர் வெங்கட் பிரபு

திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம் என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
Actor Premji's wedding: Reported by Venkat Prabhu
Published on

சென்னை,

நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம் என்று இணையத்தில் அவரது திருமண அழைப்பிதழ் வைரலானதையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும், அளவில்லாத அன்பையும் வழங்கிய ரசிகர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்!

எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. "பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்?" "சொப்பனசுந்தரியை இப்போ யாரு வச்சிருக்கா?" இதை எல்லாவற்றையும் விட, "பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?" என்ற உங்கள் கேள்விக்குப் பதில், வரும் 9ம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசீர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்!

இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிகையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார்! எப்படி கல்யாணப் பத்திரிகை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன் எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம்! 'கோட்' அப்டேட் விரைவில்.."இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com