திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ராகவா லாரன்ஸ்

தரிசனம் முடித்து வெளியே வந்த அவரை பார்த்த பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ராகவா லாரன்ஸ்
Published on

திருப்பதி,

நடிகர், இயக்குனர், நடனக் கலைஞர் என பன்முகத் திறமையுடன் திகழ்பவர் ராகவா லாரன்ஸ். தற்போது அவர் ‘பென்ஸ்’, ‘ஹண்டர்’, ‘புல்லட்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். அதோடு, தனது வெற்றிப் படத் தொடரான காஞ்சனா 4 படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல், அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துவருகிறார்.

இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் தனது அம்மாவுடன் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் சென்று சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்து வெளியே வந்த அவரை பார்த்த பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமடைந்து, அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com