’பேச்சி’ குறும்படத்தை பாராட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ்


Actor Raghava Lawrence praised the short film Peechi
x

ராகவா லாரன்ஸ் இப்படத்தின் நாயகன் ராஜமுத்துவை பாராட்டியிருக்கிறார்.

சென்னை,

இளம் இயக்குநர் அபிலாஷ் இயக்கத்தில், விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் வெளியீட்டில் 'பேச்சி' என்ற குறும்படம் யூடியூப்பில் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் இக்குறும்படத்தை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் இப்படத்தின் நாயகன் ராஜமுத்துவை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பாராட்டியிருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ல பதிவில், ‘பேச்சி குறும்படத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்வதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன்.

இந்தப் படத்தைப் பார்த்தபோது என் கண்களில் கண்ணீர் வந்தது. என் மகன் ராஜமுத்து, இத்தகைய நடிப்பை வெளிப்படுத்தியதைக் காண்பது உண்மையிலேயே ஒரு சிறப்பான அனுபவத்தை கொடுத்தது.

அவனுடைய வளர்ச்சியை என் கண் முன்னே கண்டு, இன்று அவன் இத்தகைய பெரிய உயரங்களை எட்டியிருப்பதைக் காண்பதில் பெருமை கொள்கிறேன்.

ராஜமுத்துவின் திறமையை வெளிப்படுத்த இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கிய இயக்குநர் அபிலாஷ் செல்வமணிக்கும், இந்த அழகான படைப்பிற்காக முழு படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்’ என்று தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story