கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் ராஜசேகர்

கொரோனாவில் இருந்து நடிகர் ராஜசேகர் குணமடைந்துள்ளார்.
கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் ராஜசேகர்
Published on

தமிழில் இதுதாண்டா போலீஸ், புதுமைப்பெண், ஆம்பள, மீசைக்காரன், தலைவா, அண்ணா உள்பட பல படங்களில் நடித்தவர் ராஜசேகர். தெலுங்கிலும் முன்னணி நடிகராக இருக்கிறார். ராஜசேகருக்கும், அவரது மனைவி நடிகை ஜீவிதா மற்றும் 2 மகள்கள் ஆகியோருக்கும் கடந்த மாதம் 18-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பிறகு ஜீவிதாவும் மகள்களும் குணாமாகி வீடு திரும்பினர். ஆனால் ராஜசேகருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ராஜசேகர் மகள் ஷிவாத்மிகா வெளியிட்ட பதிவில், எனது தந்தை கொரோனாவுடன் கடுமையாக போராடி வருகிறார். அவர் குணமடையை பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இது பரபரப்பானது. உடல்நிலை குறித்து வதந்திகளும் பரவின.

இந்த நிலையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு ராஜசேகர் கொரோனாவில் இருந்து மீண்டு குணமடைந்து வீடு திரும்பினார். சிறப்பான சிகிச்சை அளித்து கணவரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு நடிகை ஜீவிதா நன்றி தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com