பேரக் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்..!

நடிகர் ரஜினிகாந்த் தனது பேரக் குழந்தைகளுடன் ஆனந்தமாக தீபாவளி கொண்டாடினார்.
பேரக் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்..!
Published on

சென்னை,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கெண்டாட்டம் களை கட்டியுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையே புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். கோலிவுட் ஸ்டார்களுடன் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பேரக்குழந்தைகளுடன் தீபாவளியை இன்று ஆனந்தமாக கொண்டாடினார். தன்னுடைய இரு பிள்ளைகளுக்கும் காலில் மஞ்சள், சந்தனம், குங்குமத்தை ஐஸ்வர்யா இடுகிறார். அவர்களின் பின்னால் வெள்ளை நிற ஜிப்பா உடையில் ரஜினிகாந்த் நின்றுகொண்டு பேரக்குழந்தைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இது தொடர்பான புகைப்படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com