'மேன் வெர்சஸ் வைல்டு' படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு காயம்

'மேன் வெர்சஸ் வைல்டு' படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டு உள்ளது.
'மேன் வெர்சஸ் வைல்டு' படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு காயம்
Published on

பந்திப்பூர்,

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் உலக புகழ் பெற்ற நிகழ்ச்சி 'மேன் வெர்சஸ் வைல்டு'. இக்கட்டான சூழ்நிலைகளில் உயிர் பிழைத்திருப்பதற்கான வழிமுறைகளை சொல்லும் இந்நிகழ்ச்சி, இம்முறை கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பிற்காக பந்திபுரா புலிகள் காப்பகம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பியர் கிரில்ஸ் இயக்கும் இந்த நிகழ்ச்சிக்காக காட்டுப்பகுதியில் ரஜினிகாந்த் 2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கடந்த ஆகஸ்டு மாதம் கலந்து கொண்டு பியர் கிரில்சுடன் காடுகளில் பயணம் செய்தார். இது டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது. மோடியின் பாதையில் ரஜினியும் தன் வாழ்க்கை குறித்து பியர் கிரில்சுடன் பேசுவது போல் அமையும்.

இதனிடையே, 'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார். இதில் அவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com