ஓய்வுக்காக அபுதாபி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

வேட்டையன் படப்பிடிப்பு நிறைவடைந்ததால் ஓய்வு எடுக்க ரஜினிகாந்த் அபுதாபி புறப்பட்டு சென்றார்.
அபுதாபி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்
Published on

சென்னை,

'ஜெயிலர்' படத்திற்கு பிறகு ஞானவேல் இயக்கிய படத்தில் கமிட் ஆனார் நடிகர் ரஜினிகாந்த். அவரது 170-வது படமான இதில் நடிகர்கள் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

'வேட்டையன்' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' படத்தில் நடிக்க உள்ளார். அதன் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபி செல்லும் விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். ஒருவாரம் அபுதாபியில் தங்கி இருந்து ஓய்வு எடுக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்தை கண்டதும் ரசிகர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com