இமயமலை பாபாஜி குகையில் நடிகர் ரஜினிகாந்த் தியானம் - வைரலாகும் வீடியோ

இமயமலையில் உள்ள பாபாஜி குகைக்குச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், அங்கு நீண்ட நேரம் தியானத்தில் ஈடுபட்டார்
இமயமலை பாபாஜி குகையில் நடிகர் ரஜினிகாந்த் தியானம் - வைரலாகும் வீடியோ
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் "கூலி" படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக உள்ளது.

ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போதும், ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று ஓய்வெடுப்பது வழக்கம். கடந்த முறை வேட்டையன் படம் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் மாதம் இமயமலை சென்று வந்தார். கூலி படம் வெளியாகும் முன்பு இமயமலையில் மழை அதிகமாக இருந்ததால் அங்கு செல்லவில்லை.

தற்போது ஒரு வார கால பயணமாக அவர் இமயமலை சென்றுள்ளார். இமயமலைக்கு சென்ற ரஜினி ரிஷிகேஷ் ஆசிரமத்தில் தங்கினார். அதன் பின்னர் அவர் கர்ணபிரயாகைக்கு சென்றார். இரண்டாவது நாளில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். அங்கு சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த், தனது ஆன்மிக நண்பர்களுடன் அங்கிருந்து இமயமலையில் உள்ள பாபாஜி குகை நோக்கி புறப்பட்டார். காவலர்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர்.

இந்நிலையில், பாபாஜி குகைக்குச் சென்ற ரஜினிகாந்த், அங்கு நீண்ட நேரம் தியானத்தில் ஈடுபட்டார். தற்போது அதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com