'டூரிஸ்ட் பேமிலி' படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்!

அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய 'டூரிஸ்ட் பேமிலி' படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்தது.
'டூரிஸ்ட் பேமிலி' படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்!
Published on

சென்னை,

அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த மே 1-ந் தேதி வெளியான படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இந்த படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் உளிளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இப்படம் இலங்கை தமிழர்களான சசிகுமார் குடும்பம் அங்குள்ள பொருளாதார சூழல் காரணமாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அதன்பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடனும், எமோஷ்னலுடனும் படம் பதிவு செய்துள்ளது. குடும்பக் கதைக்களத்தில் வெளியான இப்படம் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இதற்கிடையில், சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜமவுலி, நானி, கிச்சா சுதீப் ஆகியோர் படத்தை பாராட்டினார். அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்தை நேரில் சந்தித்து பாராட்டினார். அந்த வகையில் தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த்தும் இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com