இந்திய ராணுவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு


இந்திய ராணுவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
x

சென்னை வி்மான நிலையத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தார்

சென்னை,

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த தாக்குதல்கள் நேற்று முடிவுக்கு வந்தது. இருந்தும், எல்லை பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், இந்திய ராணுவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். கேரளாவிற்கு படப்பிடிப்பிற்கு செல்வதற்காக சென்னை வி்மான நிலையத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது ,

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு பாராட்டுகள். போரை வலிமையாக, திறமையாக கையாண்ட பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருக்கும் எனது வாழ்த்துகள். என தெரிவித்தார் .

1 More update

Next Story