பத்ரிநாத் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்துள்ளார்.
பத்ரிநாத் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் "கூலி" படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக உள்ளது.

ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போதும், ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று ஓய்வெடுப்பது வழக்கம். கடந்த முறை வேட்டையன் படம் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் மாதம் இமயமலை சென்று வந்தார். கூலி படம் வெளியாகும் முன்பு இமயமலையில் மழை அதிகமாக இருந்ததால் அங்கு செல்லவில்லை. இந்நிலையில், தற்போது ஒரு வார கால பயணமாக அவர் இமயமலை சென்றுள்ளார். இமயமலைக்கு சென்ற ரஜினி ரிஷிகேஷ் ஆசிரமத்தில் தங்கினார். அதன் பின்னர் அவர் கர்ணபிரயாகைக்கு சென்றார்.

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்துள்ளார். முன்னதாக, பத்ரிநாத் கோவிலுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பத்ரிநாத் சன்னதியில் பிரசாதம் வழங்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த் பத்ரிநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com