'வாழ 2' படக்குழுவினரை பாராட்டிய நடிகர் ராம்சரண்

காமெடி எமோஷன் கலந்த வாழ 2 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

'வாழ 2' படக்குழுவினரை பாராட்டிய நடிகர் ராம்சரண்
Published on

சென்னை,

மலையாளத்தில் சவின் எஸ்ஏ இயக்கத்தில் புது முகங்கள் ஹாஷிர், ஆலன் பின் சிராஜ், அஜின் ஜாய், விநாயக் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2ஆம் தேதி வெளியான படம் 'வாழ 2'. இது கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘வாழ’ படத்தின் 2ம் பாகமாகும்.

நண்பர்களுக்குள் நடக்கும் விஷயங்களை காமெடி எமோஷன் கலந்து சொன்ன இப்படம் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் வரவேற்பை பெற்று வருகிறது. 2 ஆம் பாகத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இந்த படத்தின் 3ம் பாகத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் நடிகர் ராம் சரண் வாழ 2 படக்குழுவினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பான பதிவு ஒன்றையும் தனது எக்ஸ் பதிவிட்டுள்ளார். அதில் வாழ 2 படக்குழுவினருடன் இணைந்து உரையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாகத் திகழ்ந்த இப்படம், தற்போது தெலுங்கு ரசிகர்களைச் சென்றடையத் தயாராகி வருகிறது. இப்படத்தை இன்னும் பரந்த அளவிலான ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சஹுகாரபதி மற்றும் அர்ச்சனா ஆகியோரைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

இப்படத்தின் உந்துசக்தியாகத் திகழும் விபின் தாஸ் , இயக்குனர் சவின் எஸ்.ஏமற்றும் அந்த இளம் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com