நடிகர் ராமராஜனின் மூத்த சகோதரி காலமானார்

நடிகர் ராமராஜனின் மூத்த சகோதரி புஷ்பவதி இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது.
நடிகர் ராமராஜனின் மூத்த சகோதரி காலமானார்
Published on

'கரகாட்டக்காரன்', 'எங்க ஊரு பாட்டுக்காரன்' உள்ளிட்டப் படங்களில் நடித்து 80-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் ராமராஜன். இவர் தற்போது 'சாமானியன்' என்றப் படத்தின் மூலமாக சினிமாவுக்கு கம்பேக் கொடுக்க இருக்கிறார்.

1977-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடித்து வரும் ராமராஜன் மதுரை மேலூரைச் சேர்ந்தவர். ராமராஜனுக்கு 2 அண்ணன்கள், 2 சகோதரிகள் இருந்தனர். அவரது உடன்பிறந்த மூத்த சகோதரி புஷ்பவதி (75) இன்று மாலை மதுரை அருகே சொந்த ஊரான மேலூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். செய்தி அறிந்ததும் இறுதி சடங்கில் கலந்து கொள்ள ராமராஜன் மேலூர் விரைந்துள்ளார்.

நாளை மேலூரில் புஷ்பவதியின் உடல் நல்லடக்கம் நடைபெற உள்ளது. சகோதரியை இழந்து வாடும் நடிகர் ராமராஜனுக்கு பலர் ஆறுதல் கூறிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com