நடிகர் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

நடிகர் ரவி - ஆர்த்தி தம்பதியின் விவாகரத்து வழக்கு அடுத்த மாதம் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு
Published on

சென்னை,

நடிகர் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2009-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தங்களது திருமண பதிவை ரத்து செய்து மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி ரவி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து, விவாகரத்து கோரி ரவி தொடர்ந்த மனு மீதான விசாரணை சென்னை குடும்ப நல கோர்ட்டில் நடந்து வருகிறது. அங்கு நடிகர் ரவி மற்றும் அவரது மனைவி இருவரும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து, 3 முறை நடிகர் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் சமரச தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், இன்று அந்த வழக்கு குடும்ப நல கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இருவரும் காணொலி வாயிலாக ஆஜரானநிலையில், சமரச பேச்சுவார்த்தையை நிறைவு செய்த பின்னர் விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com