‘பராசக்தி’ பட டிரெய்லரை பாராட்டி பதிவிட்ட நடிகர் ரிஷப் ஷெட்டி!

சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி உள்ளது.
இந்த படம் பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று யூடியூபில் கொஞ்ச நேரத்திலேயே அதிக வியூஸ்களை அள்ளியது.
இந்த டிரெய்லரில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு காட்சியும், வசனமும் உணர்ச்சிபூர்வமாக இருப்பதாக கூறுகிறார்கள். இந்த நிலையில், காந்தாரா படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ரிஷப் ஷெட்டி பராசக்தி படத்தின் டிரெய்லரை பாராட்டியும், படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தும் பதிவிட்டுள்ளார்.






