பொறுப்பின்றி விலகி செல்லும் தந்தை - நடிகை சமந்தாவின் பதிவு வைரல்

உண்மையை பேசுபவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள் என நடிகை சமந்தா கூறியுள்ளார்.
 நடிகை சமந்தாவின்  பதிவு வைரல்
Published on: 

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த 2025-ம் ஆண்டு பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோருவை கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான 'எங்கள் தங்கம்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தான் கர்ப்பமாக இருப்பதாக சமந்தா அறிவித்தார். குழந்தை பிறக்கும் வரை சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்க இருப்பதாகவும், குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் திரையுலகில் இணைவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில், நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "நாம் இன்னும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

"நாம் வாழும் உலகில்.." பாலியல் தொழிலாளர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள்; ஆனால் அங்கு செல்லும் வாடிக்கையாளர்கள் பற்றி யாரும் பேசுவதில்லை;

Single Mother-ஐ விமர்சிக்கும் இந்த சமூகம், ஆனால் பொறுப்பின்றி விலகிச் செல்லும் தந்தைகள் பற்றி பேசுவதில்லை பாலியல் கொடுமைக்கு ஆளானவர்களை விமர்சிப்பவர்கள், அந்த வன்கொடுமையை செய்தவனை பற்றி பேசுவதில்லை; உண்மையை பேசுபவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள்; ஆனால் அதை மறைத்து மூடி மறைப்பவர்கள் விமர்சிக்கப்படுவதில்லை; நாம் இன்னும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நடிகை சமந்தாவின் இன்ஸ்டா ஸ்டோரி பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com