நடிகர் சந்தோஷ் பிரதாப்பின் தாயார் காலமானார்

“சார்பட்டா பரம்பரை” படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் தாயார் இந்திரா பாய் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
நடிகர் சந்தோஷ் பிரதாப்பின் தாயார் காலமானார்
Published on

சென்னை,

2014ம் ஆண்டு, நடிகர் பார்த்திபன் தயாரித்து - இயக்கிய 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர், சந்தோஷ் பிரதாப். இவர் நடித்த படங்களில் தாயம், பயமா இருக்கு, பொதுநலன் கருதி போன்ற படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தன்னை மக்களிடம் பிரபலப்படுத்திக்கொள்ளும் விதமாக, 'குக் வித் கோமாளி சீசன் 3' நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். ஹீரோவாக நடித்து வந்த சந்தோஷ் பிரதீப் தற்போது, முன்னணி நடிகர்களின் படங்களில் குணசித்ர வேடத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த சார்பட்டா பரம்பரை, அரண்மனை 4, பத்து தல போன்ற படங்களின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. திரைப்படத்தை தாண்டி வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார் சந்தோஷ்.

இந்நிலையில் இவருடைய தாய் இந்திரா பாய் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடல் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் வைக்கப்பட்டது. இதில் உறவினர்கள், நண்பர்கள் பலர் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நடிகர் சந்தோஷ் பிரதாப், தனது தாயாருக்கு இறுதி காரியங்களைச் செய்வதற்கு ஊர்வலமாக தகன மின் மயானத்திற்கு வாகனம் மூலமாக உடலை கொண்டு சென்ற காட்சி பார்ப்போரை கண் கலங்க வைத்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com