நடிகர் சரத்பாபுவுக்கு உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி என தகவல்

உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் நடிகர் சரத்பாபு அனுமதிக்கப்பட்டுள்ளார்
நடிகர் சரத்பாபுவுக்கு உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி என தகவல்
Published on

சென்னை,

1973-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. இவர் 1977-ஆம் ஆண்டு இயக்குனர் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'பட்டின பிரவேசம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கவனம் செலுத்தினார்.

இவர் ரஜினிகாந்துடன் முத்து, அண்ணாமலை, போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மேலும் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சரத்பாபு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com