கான்ஜுரிங் கண்ணப்பன் பட டைரக்டருக்கு நடிகர் சதீஷ் விலை உயர்ந்த வாட்ச் பரிசு

கடந்த 8 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனங்களை பெற்றது.
கான்ஜுரிங் கண்ணப்பன் பட டைரக்டருக்கு நடிகர் சதீஷ் விலை உயர்ந்த வாட்ச் பரிசு
Published on

சென்னை,

அறிமுக டைரக்டர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம், 'கான்ஜுரிங் கண்ணப்பன்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில், சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், ரெஜினா கஸாண்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, எல்லி அவ்ரம், ஜேஸன் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்துக்கு எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். காமெடி ஹாரர் பாணியில் உருவாகிய இந்த படம் கடந்த 8 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், கான்ஜுரிங் கண்ணப்பன் பட டைரக்டர் செல்வின் ராஜ்க்கு பிறந்த நாள் பரிசாக நடிகர் சதீஷ் விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை வழங்கியுள்ளார். நடிகர் சதீஷ், செல்வின் ராஜ்க்கு வாட்ச் அளிக்கும் வீடியோவை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com