நடிகர் சதீஷ் நடித்த 'சட்டம் என் கையில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் சாச்சி 'சட்டம் என் கையில்' படத்தினை இயக்கி உள்ளார்.
நடிகர் சதீஷ் நடித்த 'சட்டம் என் கையில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ். இவர் 'மெரினா, தமிழ் படம், மதராச பட்டணம், வாகை சூடவா, தாண்டவம், எதிர்நீச்சல், கத்தி, மான்கராத்தே, ரெமோ, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், கலகலப்பு-2, சிக்ஸர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர் சதீஷ் 'நாய் சேகர்' என்ற திரைப்படம் மூலம் கதையின் நாயகனாக களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்ததாக 'ஓ மை கோஸ்ட்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தநிலையில் தற்போது, 'சட்டம் என் கையில்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை சம்பதா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'சிக்ஸர்' திரைப்படத்தை இயக்கிய சாச்சி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

தற்போது, இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது குறித்த அறிவிப்பை நடிகர் சதீஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com