பிரபல டைரக்டர் மீது நடிகை போலீசில் பாலியல் புகார்

பிரபல டைரக்டர் மீது நடிகை ஷெர்லின் சோப்ரா போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
பிரபல டைரக்டர் மீது நடிகை போலீசில் பாலியல் புகார்
Published on

நடிகைகள் பலர் 'மீடூ' இயக்கம் மூலம் பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தினர். பிரபல இந்தி டைரக்டர் சஜித்கான் மீது 10 பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சஜித்கானும் போட்டியாளராக பங்கேற்றதற்கு நடிகைகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்தி நடிகை ஷெர்லின் சோப்ராவும் சஜித்கான் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும், இந்த காமகொடூரரை பிக்பாஸ் போட்டியாளராக சல்மான்கான் எப்படி அறிமுகப்படுத்தலாம் என்றும் விளாசினார்.

இந்த நிலையில் மும்பை ஜூஹு போலீஸ் நிலையத்துக்கு ஷெர்லின் சோப்ரா நேரில் சென்று சஜித்கான் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து புகார் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ''சஜித்கான் மீது போலீசில் பாலியல் புகார் கொடுத்தேன். போலீஸ் நிலையத்தில் எனக்கு யாரும் உதவவில்லை. எனக்கே இப்படி என்றால் சாதாரண பெண் நிலைமையை நினைத்து பாருங்கள். சஜித்கானுக்கு நடிகர் சல்மான்கான் உதவி செய்கிறார். இதனால் சஜித்கானை யாரும் தொட முடியாது. வழக்கில் பாரபட்சமற்ற நீதி வழங்க வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com