கண் சிமிட்டி பிரபலமான பிரியா வாரியருடன் நடிகர் சித்தார்த் சந்திப்பு

பிரியா வாரியருடன் நடிகர் சித்தார்த் சந்திப்பு, ஜோடியாக நடிப்பாரா என எதிர்பார்ப்பு.
கண் சிமிட்டி பிரபலமான பிரியா வாரியருடன் நடிகர் சித்தார்த் சந்திப்பு
Published on


மலையாளத்தில் தயாரான ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் கண்சிமிட்டி சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்ட பிரியா வாரியருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கையில் பிரபல நடிகைகளையெல்லாம் பின்னுக்கு தள்ளி உள்ளார். 60 லட்சம் பேருக்கும் மேல் அவரை பின்தொடர்கிறார்கள்.

முதல் படம் வெளியாகும் முன்பு அவருக்கு பிற மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் குவிகின்றன. தெலுங்கு படத்துக்கு ஒப்பந்தம் செய்ய பெரிய தொகையை சம்பளமாக பேசி அணுகி உள்ளனர். இந்தி படத்துக்கும் அழைப்பு வந்துள்ளது. ஒரு அடார் லவ் படம் ரிலீசுக்கு பிறகுதான் வேறு படங்களில் நடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் ஒப்பந்தம் போட்டு இருப்பதால் கதைகள் மட்டும் இப்போது கேட்டு வருகிறார்.

பிரியா வாரியரின் ஒரு அடார் லவ் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட வினியோகஸ்தர்கள் மத்தியில் போட்டா போட்டி நிலவுகிறது. இதை பயன்படுத்தி டப்பிங் உரிமைக்கு அதிக விலைபேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த்தும் பிரியா வாரியரை சந்தித்து பேசி உள்ளார். இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பி படத்தை விங்க் விங்க் என்று குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு உள்ளார்.

சித்தார்த் முதல் முறையாக மலையாளத்தில் கம்மார் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்காக அவர் கேரளா சென்றபோது பிரியா வாரியரை சந்தித்துள்ளார். சித்தார்த்தின் அடுத்த படத்தில் பிரியா வாரியர் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதுகுறித்து இருவரும் பேசி இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com