ஆவடி சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சிம்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, தற்போது ’தக் லைப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சென்னை,
ஆவடியில் உள்ள மாசிலாமணீசுவரர் கோவிலில் நடிகர் சிம்பு சாமி தரிசனம் செய்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டத்தில் உள்ள திருமுல்லைவாசல் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோவில் இதுவாகும்.
இங்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்தவகையில் தற்போது நடிகர் சிம்பு சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, தற்போது தக் லைப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளநிலையில், சிம்பு அடுத்தடுத்து இன்னும் பெயரிடப்படாத 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
Related Tags :
Next Story






