15ம் ஆண்டு திருமண நாள்...மனைவிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து

திருமண நாளை முன்னிட்டு தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிவகார்த்திகேயன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து, பல வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகன் என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான ‘அமரன்’ படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வரும் முன்னரே ஆர்த்தி என்ற தனது மாமா மகளை திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதிக்கு ஆராதனா என்கிற மகளும் குகன் மற்றும் பவன் என்கிற இரு மகன்களும் உள்ளனர்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்தில் நடித்துள்ளார். ‘மதராஸி’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், 15 ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி தனது மனைவி ஆர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிவகார்த்திகேயன் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில், “15ம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துகள் ஆர்த்தி. நீ எப்போதும் என்னுடையவள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 15ம் ஆண்டு திருமண நாளை கேக் வெட்டி மனைவி ஆர்த்தி, குழந்தைகளுடன் நடிகர் சிவகார்த்திகேயன் கொண்டாடியுள்ளார்.






