

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி தவெக 102, திமுக 75, அதிமுக 57 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக, திமுக மாறி மாறி 2-ம் இடத்துக்கு போட்டாபோட்டி நிலவிய நிலையில் தற்போது திமுக 2-ம் இடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதுமே மண்டலங்கள் கடந்து பரவலாக தவெக தொடர் முன்னிலையில் இருக்கிறது.
சட்டமன்ற தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்ள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள். நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார்”என்றார்.