நடிகர் சிவகார்த்திகேயன் மனைவியுடன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம்

கோவிலில் இருந்து வெளியே வரும் போது சிவகார்த்திகேயனை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.
நடிகர் சிவகார்த்திகேயன்  மனைவியுடன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம்
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது 26வது திரைப்படமான 'சேயோன்' படத்த்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்புகளுக்கு நடுவே ஓய்வு கிடைக்கும் நேரத்தில் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில், இன்று பழனி முருகன் கோவிலில் சிவகார்த்திகேயேன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்தார். முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டார். கோவிலில் இருந்து வெளியே வரும் போது சிவகார்த்திகேயனை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர். முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பாக 18-ஆம் படி கருப்பணசுவாமிக்கு 5 அடி நீளமுள்ள அரிவாளை நேர்த்திக்கடனாக செலுத்தி சிறப்பு வழிபாடு செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com