

‘அமரன்’ திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். உலகளவில் கிட்டதட்ட 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'அமரன்' திரைப்படம் வெளியாயிற்று. இத்திரைப்படம் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மேலும் இப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ‘அமரன்’ திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவையொட்டி கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டுள்ளது.
‘அமரன்’ திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார்.