நடிகர் சிவகுமாருக்கு டாக்டர் பட்டம்


Actor Sivakumar gets doctorate
x

இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை அவருக்கு வழங்குகிறார்.

சென்னை,

தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக் கழகம் சார்பில் நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துரு ஆகியோருக்கு மதிப்புமிக்க டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை அவருக்கு வழங்குகிறார்.

கடந்த 1965-ம் ஆண்டு வெளியான ’காக்கும் கரங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவகுமார். 1967-ல் வெளியான ’கந்தன் கருணை’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது.

இவர் கடைசியாக 2001-ல் வெளியான அஜித், ஜோதிகாவின் ’பூவெல்லாம் உன் வாசம்’ படத்தில் நடித்திருந்தார். சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார். தற்போது நடிப்பை நிறுத்திவிட்டு சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

1 More update

Next Story