வருமான வரி சோதனை: நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு

நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Image Source : INSTAGRAM/SONU SOOD
Image Source : INSTAGRAM/SONU SOOD
Published on

புதுடெல்லி:

பாலிவுட் நடிகர் சோனு சூட் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து அதன் மூலம் பலராலும் பாராட்டுக்களைப் பெற்று உள்ளார்.

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் மூலமாக நடிகர் சோனு சூட் அரசியலில் இறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நடிகர் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் மும்பையில் உள்ள அவருக்கு சொந்தமான ஆறு இடங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனையில் பாலிவுட் திரைப்படங்கள் மூலமாக சோனு சூட் சொந்த நிதி நிறுவனம் மூலம் வந்த பணம் மறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் 3 நாட்கள் நீடித்த சோதனை குறித்து வருமானவரித்துறை தகவல் அளித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து ரூ.2 கோடி நன்கொடை பெற்றதில் விதிமீறல் நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறுவப்பட்ட அவரது இலாப நோக்கற்ற தொண்டு அறக்கட்டளை ரூ.18 கோடிக்கு மேல் நன்கொடை சேகரித்து உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் வரை, அதில் ரூ.1.9 கோடி நிவாரணப் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது . மீதி ரூ. 17 கோடி லாப நோக்கற்ற வங்கிக் கணக்கில் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com