திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சோனு சூட் சாமி தரிசனம்

அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி, வளர்ச்சி வேண்டி பிரார்த்திக்கிறேன்’ என்றார்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சோனு சூட் சாமி தரிசனம்
Published on

திருப்பதி,

பிரபல இந்தி நடிகர் சோனு சூட். இவர் தமிழ் சினிமா படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் ஆவார். தமிழில் 'ஒஸ்தி', 'தேவி', 'மதகஜராஜா' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்

இந்நிலையில், நடிகர் சோனு சூட் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தபின் பேசிய சோனு சூட், இன்று நான் எனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன். திருப்பதி கோவிலுக்கு நான் 25 ஆண்டுகள் கழித்து வந்துள்ளேன். அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி, வளர்ச்சி வேண்டி பிரார்த்திக்கிறேன்' என்றார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிறுகிழமைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com