'பறந்து போ' மற்றும் '3 பிஎச்கே' படக்குழுக்களை வாழ்த்திய நடிகர் சூரி


பறந்து போ மற்றும் 3 பிஎச்கே படக்குழுக்களை வாழ்த்திய நடிகர் சூரி
x
தினத்தந்தி 4 July 2025 10:42 AM IST (Updated: 4 July 2025 11:24 AM IST)
t-max-icont-min-icon

இன்று வெளியாகும் இந்த இரண்டு அற்புதமான திரைப்படங்கள் ஒவ்வொரு குடும்பத்தின் இதயத்தையும் தொடும்! என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார்'

சென்னை,

இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் பறந்து போ திரைப்படமும், ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் 3 பிஎச் கே திரைப்படமும் இன்று வெளியாகி உள்ளன.

இந்தநிலையில், இந்த இரண்டு படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்து நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்று வெளியாகும் இந்த இரண்டு அற்புதமான திரைப்படங்கள் ஒவ்வொரு குடும்பத்தின் இதயத்தையும் தொடும்!

பறந்து போ : அப்பா-மகன் இடையேயான ஆழமான பாசப்பிணைப்பையும், உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஒரு நெகிழ்ச்சியான பயணத்தையும் உயிரோட்டமாக சித்தரிக்கும்.

3 பிஎச்சே : ஒரு குடும்பத்தின் கனவு இல்லத்தை அடையும் உணர்ச்சிகரமான பயணத்தை அழகாக விவரிக்கும். இந்த இரு படங்களும் காதல், மகிழ்ச்சி மற்றும் வாழ்வின் உண்மையான தருணங்களால் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.

இயக்குநர் ராம் அவர்களின் ஆழமான உணர்வுகளைத் தூண்டும், கலைநயமிக்க, தனித்துவமான பார்வை தனது படத்திற்கு உயிரூட்டி, இதயங்களை ஆழமாகத் தொடும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும்.

அதேபோல், இயக்குநர் ஸ்ரீகணேஷ் அவர்களின் புதுமையான, நேர்த்தியான படைப்பாற்றல் தனது படத்திற்கு உயிர் கொடுத்து, மனதை மயக்கும், நெகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கும்.

முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story