பழனி முருகன் கோவிலில் நடிகர் சுந்தர் சி-குஷ்பு சாமி தரிசனம்

சாமி தரிசனம் செய்த பின்னர் நிருபர்களிடம் மதுரை மத்திய தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.
பழனி முருகன் கோவிலில் நடிகர் சுந்தர் சி-குஷ்பு சாமி தரிசனம்
Published on

பழனி,

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு நேற்று நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி, அவரது மனைவி நடிகை குஷ்பு, அவர்களது மகள் மற்றும் நடிகர் ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தி, அவரது தாயார் சுஜாதா உள்ளிட்டோர் உறவினர்களுடன் சென்றார். தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின் பேட்டரி காரில் கிரி வீதிக்கு சென்றனர்.பின்னர் மின் இழுவை ரெயில் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்தனர்.

அதைதொடர்ந்து போகர் சன்னதி மற்றும் ஆனந்த விநாயகர் கோவிலிலும் வழிபாடு செய்தனர். வெளிப் பிரகாரத்துக்கு வந்து நடிகர் சுந்தர் சி தேர்தலில் வெற்றி பெற மனமுருக வேண்டிக் கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பழனி மலை கோவிலில் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

பின்பு நிருபர்களிடம் சுந்தர் சி கூறுகையில், "எனக்கு பழனி தான் பூர்வீகம். எனது குலதெய்வமான முருகப்பெருமானை வணங்குவதற்கு அடிக்கடி இங்கு வருவது வழக்கம் தான். மதுரை மத்திய தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது." என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com