விஜய் ஆண்டனியின் “பூக்கி ” படத்தில் இணைந்த நடிகர் சுனில்

கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் தீஷன் நடிக்கும் ‛பூக்கி’ படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து வருகிறார்.
சென்னை,
விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். தற்போது இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களில் கலக்கி வரும் விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி’ என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி’ இயக்குகிறார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பாண்டியராஜன், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
2கே தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், இப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளார்.






