கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் சூரி: புகைப்படம் எடுத்துக்கொண்ட ரசிகர்கள்

கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியை காண நடிகர் சூரி வந்திருக்கிறார்.
கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் சூரி: புகைப்படம் எடுத்துக்கொண்ட ரசிகர்கள்
Published on

சென்னை,

இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 8-ந் தேதி முகூர்த்தக்கால் ஊன்றி திருவிழா ஆரம்பமானது.

மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 19-ந்தேதி பட்டாபிஷேகமும், 20-ந்தேதி திக்கு விஜயமும் நடந்தன. மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், நேற்று காலை தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றன.

இந்நிலையில் இன்று அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். முன்னதாக வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்க எழுந்தருளி இருந்தார்.

இந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்தனர்.

இந்நிலையில், கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்கு நடிகர் சூரி வந்திருக்கிறார். இதனைக்கண்ட ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இது குறித்தான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com