கேப்டன் விஜயகாந்த் உருவப்படத்துக்கு நடிகர் சூரி மரியாதை!

விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்கள் தினமும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.
கேப்டன் விஜயகாந்த் உருவப்படத்துக்கு நடிகர் சூரி மரியாதை!
Published on

சென்னை,

தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 28-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, அவரது நினைவிடத்திற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் தினமும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

அந்த வகையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்தின் இல்லத்திற்கு சென்ற நடிகர் சூரி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு பிரேமலதா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com