

தமிழ் சினிமாவில் ஐயா, சாமி, சிங்கம் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்தவர் டைரக்டர் ஹரி. இவர் சிறந்த கமர்ஷியல் டைரக்டராக பார்க்கப்படுகிறார். இந்த நிலையில், சென்னையில இவர் மூன்றாவது ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியிருந்தார். இந்த ஸ்டுடியோவை நடிகர் சூர்யா தொடங்கிவைத்துள்ளார்.
இந்த ஸ்டுடியோ திறப்பு நிகழ்வில் ஹரி மனைவி பிரீத்தா சகோதரி ஸ்ரீதேவியும் வந்துள்ளார். இருவரும் இணைந்து எடுத்து புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
நடிகர் விஜயகுமாரின் மகள்களாக பிரீத்தாவும், ஸ்ரீதேவியும் படங்களில் நடித்துள்ளனர். திருமணத்துக்கு பின்னர் இவர்கள் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டனர்.
இந்நிலையில் இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன. இயக்குனர் ஹரி கடைசியாக நடிகர் அருண் விஜய்யை வைத்து யானை என்ற படத்தை இயக்கினார்.
இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது ரத்தினம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram