இந்தி படத்தில் நடிப்பதை உறுதி செய்த நடிகர் சூர்யா!

நேரடி இந்திப் படத்தில் நடிக்கவிருப்பதை பேட்டியொன்றில் உறுதிப்படுத்தி இருக்கிறார் சூர்யா.
இந்தி படத்தில் நடிப்பதை உறுதி செய்த நடிகர் சூர்யா!
Published on

சென்னை,

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்துள்ளார். மேலும் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் 14-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, இந்திப் படத்தில் நடிக்க உள்ளதை உறுதிப்படுத்தி இருக்கிறார் சூர்யா. அதில் "சில பேச்சுவார்த்தைகள் சென்றுக் கொண்டிருக்கிறது. ஒரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு பல விஷயங்கள் முடிவாக வேண்டியதுள்ளது. இப்பணிகள் எல்லாம் ஓராண்டுக்கு முன்பே தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதுவே எனது முதல் படமாக இருக்கும். அதை இங்கு தெரிவிக்க சரியான தருணம் அல்ல. அதை தயாரிப்பாளர்கள் அறிவித்தால் மட்டுமே சரியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார் சூர்யா.

ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள 'கர்ணா' படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மும்பையில் சூர்யா - ராகேஷ் ஓம்பிரகாஷ் இருவரும் சந்தித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின. ஆனால் அவர்கள் இருவரும் இணைவது குறித்து அதிகாரபூர்வமாக எதுவுமே அறிவிக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

'தூம் 4' படத்தின் வில்லனாக சூர்யா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com