“மண்டாடி” இயக்குநருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து கடிதம்

சூரி நாயகனாக நடித்து வெளியான ‘மண்டாடி’ மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“மண்டாடி” இயக்குநருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து  கடிதம்
Published on: 

“மண்டாடி” திரைப்பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தியை வாழ்த்தி நடிகர் சூர்யா கடிதம் அனுப்பியுள்ளார்.

சூரியின் நடிப்பில் கடந்த 10ந் தேதி வெளியான படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மீனவர்களின் வாழ்க்கை கதை

மீனவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது. ‘மண்டாடி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

திரைப்படத்தின் வசூல்

ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற “மண்டாடி” திரைப்படம் உலகளவில் ரூ. 140 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“மண்டாடி” இயக்குநருக்கு சூர்யா வாழ்த்து

இந்த நிலையில், ‘மண்டாடி’ பட இயக்குநர் மதிமாறன் புகழேந்திக்கு நடிகர் சூர்யா வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் “அற்புதமான பொழுதுப்போக்குப் படைப்பிற்கு நன்றி. திரைப்படத்தைப் பார்ப்பதற்குத் தாமதமானாலும், 23 ஆவது நாளில் திரையரங்குகளில் ரசிகர்களின் ஆராவாரம், விசில் மற்றும் கைத்தட்டல்களுக்கு இடையே இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அற்புதமாக எழுதியுள்ளீர்கள். உங்களுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்” என கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com