வைபவ் நடித்த “மணிகண்டா” படத்தின் இரண்டாவது பாடலை வெளியிடும் நடிகர் சூர்யா

விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மணிகண்டா’ படத்தில் வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளனர்.
வைபவ் நடித்த “மணிகண்டா” படத்தின் இரண்டாவது பாடலை வெளியிடும் நடிகர் சூர்யா
Published on: 

சென்னை,

‘மணிகண்டா’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘கருப்பு வந்தா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடல் நாளை (நவம்பர் 28) காலை 11 மணிக்கு வெளியாகிறது.

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மணிகண்டா’. ஐயப்ப சுவாமியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ‘மாளிகைப்புரம்’ படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ளார்.

முக்கிய கதாபாத்திரங்களில் வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன்

இப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, மீனாட்சி கோவிந்தராஜன், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தாந்த்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இயக்குநர் வெங்கட் பிரபு பணியாற்றியுள்ளார். பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. மேலும், படத்தின் முதல் பாடலான ‘எந்த மலை சேவித்தாலும்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. பிரேம்ஜி இசையமைத்த இப்பாடலைப் பிரபல பக்திப் பாடகர் வீரமணிதாசன் பாடியிருந்தார்.

2-வது பாடலை வெளியிடும் சூர்யா

இந்த நிலையில், ‘மணிகண்டா’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘கருப்பு வந்தா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடல் நாளை (நவம்பர் 28) காலை 11 மணிக்கு வெளியாகிறது. இந்தப் பாடலை நடிகர் சூர்யா வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான முதல் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்த நிலையில், இரண்டாவது பாடலின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பல்வேறு மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘மணிகண்டா’, வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X