ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யா

சூர்யாவின்‘கருப்பு’ படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யா
Published on

சென்னை,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது. முதல் பாடலான காட் மோட் என்ற பாடல் வெளியாகி வைரலானது.

புத்தாண்டை முன்னிட்டு கருப்பு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கருப்பு படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்து நடிகர் சூர்யா புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com