நீண்ட தலைமுடியுடன் புதிய தோற்றத்தில் நடிகர் சூர்யா

நீண்ட தலைமுடியுடன் மாறுபட்ட புதிய தோற்றத்தில் நடிகர் சூர்யாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
நீண்ட தலைமுடியுடன் புதிய தோற்றத்தில் நடிகர் சூர்யா
Published on

சென்னை,

நடிகர் சூர்யா மற்றும் நடிகை அபர்ணா பாலமுரளி நடிப்பில் தயாரான சூரரை போற்று திரைப்படம் வரும் 12ந்தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இந்த படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவின் மகள் உத்தராவுக்கும், விக்னேஷ் என்பவருக்கும் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சமீபத்தில் திருமணம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், பவானிஸ்ரீ, இயக்குனர் மணிரத்னம் மற்றும் சுகாசினி மணிரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதேபோன்று நடிகர் சூர்யாவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்து உள்ளார்.

நடிகர் சூர்யா நீண்ட தலைமுடியுடன், உடலுடன் பொருந்திய சிக்கான உடையுடன் கூடிய அவரது மாறுபட்ட புதிய தோற்றம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் ஈர்த்தது. அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இந்த புதிய தோற்றம் ஆனது, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் தோன்றும் சூர்யாவின் தோற்றம் அல்லது நவரசா என்ற படத்திற்கான தோற்றம் ஆக இருக்க கூடும் என்று கூறப்படுகிறது. இந்த புகைப்படங்களை சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com