சுதா கொங்கரா டைரக்‌ஷனில் சூர்யா புதிய படத்தின் பெயர், ‘சூரரைப் போற்று’

சூர்யா, ‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அந்த படத்தில் அவர் விஜய், சிம்ரன், கவுசல்யா ஆகியோருடன் இணைந்து நடித்து இருந்தார். மணிரத்னம் தயாரிக்க, வசந்த் டைரக்டு செய்திருந்தார்.
சுதா கொங்கரா டைரக்‌ஷனில் சூர்யா புதிய படத்தின் பெயர், ‘சூரரைப் போற்று’
Published on

காக்க காக்க, அயன், சில்லுனு ஒரு காதல், சிங்கம், ஆதவன் உள்பட பல வெற்றி படங்களில் சூர்யா நடித்து இருக்கிறார்.

அவர் நடித்த 37-வது படம், தானா சேர்ந்த கூட்டம். அந்த படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். விக்னேஷ் சிவன் டைரக்டு செய்திருந்தார். அடுத்து அவர், செல்வராகவன் டைரக்ஷனில் நடித்த என்.ஜி.கே, கே.வி.ஆனந்த் டைரக்ஷனில் நடித்த காப்பான் ஆகிய 2 படங்களின் படப்பிடிப்பும் முடிவடைந்து, விரைவில் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன.

அதைத்தொடர்ந்து சூர்யா, இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா டைரக்ஷனில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு, சூரரைப் போற்று என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது, சூர்யா நடிக்கும் 38-வது படம். இதில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளை சேர்ந்த பிரபல நடிகர்-நடிகைகளும் பங்கேற்கிறார்கள்.

சூர்யாவின் 2டி நிறுவனம், சீக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஆகிய 2 படநிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. இணை தயாரிப்பு: ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com