கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் நடிகர் சூர்யா-ஜோதிகா சாமி தரிசனம்


கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் நடிகர் சூர்யா-ஜோதிகா சாமி தரிசனம்
x

கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் நடிகர் சூர்யா-ஜோதிகா சாமி தரிசனம் செய்தனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகாவில் கொல்லூர் மூகாம்பிகை கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு கர்நாடகம் மட்டுமின்றி அண்டை நாடுகளான கேரளா, தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில், நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு நேற்று சென்றார். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கோவிலில் நடைபெற்ற சிறப்பு சண்டி யாகத்தில் கலந்து கொண்டனர். பின்னர் மூகாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தி சூர்யா, ஜோதிகா சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா-ஜோதிகாவுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

கடந்த 20-ந் தேதி தமிழ்நாடு ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story