'பைட் கிளப்' படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு

'பைட் கிளப்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
'பைட் கிளப்' படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு
Published on

சென்னை,

அறிமுக அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பைட் கிளப்' (Fight Club). இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.ரீல் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ள இந்த திரைப்படம்  நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், 'பைட் கிளப்' படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

'பைட் கிளப்' ஒரு ஸ்டைலிஷான ஆக்ஷன் படம். விஜய்குமார் செல்வாவாக நடித்ததை ரசித்தேன். அறிமுக இயக்குனர் அப்பாஸ் மற்றும் இளம் தொழில்நுட்ப குழுவிற்கு எனது பாராட்டுகள் . இவ்வாறு தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com