

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் எடப்பாடி தொகுதியைத் தவிர்த்து மொத்தம் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட த.வெ.க., 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் விஜய்க்கு நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகர் டி.ராஜேந்தர் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "தெய்வ பலத்திலே, தேர்தல் களத்திலே, முதல் முயற்சியிலேயே வெற்றிப்படி கட்டு, அதை எட்டு என்று எட்டிப் பிடித்திருக்கும் தொகுதிகளோ 108.. வெற்றிக்கனியை தட்டி பறித்திருக்கும் நண்பர் விஜய் அவர்களை வாழ்த்துகிறேன்.." என்று தெரிவித்துள்ளார்.