'எனது முதல் படம்...' - இயக்குனராகும் உன்னி முகுந்தன்

சூப்பர் ஹீரோ படத்தை நடிகர் உன்னி முகுந்தன் இயக்க உள்ளார்.
சென்னை,
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். மலையாளத்தில் 'மார்கோ', தமிழில் 'கருடன்' போன்ற சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ள உன்னி முகுந்தன், அடுத்ததாக இயக்குனராக அறிமுகமாக உள்ளதாகவும் தனது முதல் படம் ஒரு சூப்பர் ஹீரோ படமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் மூவீஸின் கோகுலம் கோபாலன் தயாரிக்கவுள்ளதாகவும், ஸ்கிரிப்டை மேவரிக் மிதுன் மானுவல் தாமஸ் எழுதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் தற்போது நடித்து வரும் படத்தை முடித்த பிறகு இந்த சூப்பர் ஹீரோ படத்தை தொடங்க உள்ளதாக கூறிய உன்னி முகுந்தன், படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story






