சினிமா வாழ்க்கையில் அவரைத்தான் தெய்வமாக கருதுகிறேன் - நடிகர் வடிவேலு

கால்வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடியாக உள்ளது என்று நடிகர் வடிவேலு கூறினார்.
சினிமா வாழ்க்கையில் அவரைத்தான் தெய்வமாக கருதுகிறேன் - நடிகர் வடிவேலு
Published on

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக கொடி கட்டிப்பறந்த வடிவேலு 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க மறுத்ததால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பல வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.

அப்போது அவருக்கு எதிராக விமர்சனங்கள் கிளம்பின. சக நகைச்சுவை நடிகர்களும் வடிவேலுவை குறை கூறினர். இனிமேல் அவரால் நடிக்கவே முடியாது என்றும் கூறினர். இந்த நிலையில் பிரச்சினைகள் முடிந்து 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' மூலம் வடிவேலு மீண்டும் நடிக்க வந்தார். 'மாமன்னன்' படத்தில் வடிவேலு நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.

சினிமா அனுபவங்கள் குறித்து நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் நடிகர் வடிவேலு கூறியதாவது:-

சினிமா வாழ்க்கையில் நடிகர் ராஜ்கிரனை தெய்வமாக கருதுகிறேன். அவர்தான் எனக்குள் இருக்கும் திறமையை அறிந்து படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். சினிமாவில் நல்ல விஷயங்களை விட கெட்டது அதிகம் இருக்கிறது. நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டேன்.

கால்வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி. இதை கமல்ஹாசனிடம் சொன்னபோது, இதுமாதிரி நிறைய வரும். அதை தாண்டி நடித்து முன்னேற வேண்டும் என்றார். நான் மீண்டும் நடிக்க வந்ததும் என்னை விமர்சனம் செய்தவர்கள் யாரையும் காணவில்லை. தொழிலை நேசித்து செய்தால் தோற்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com