நடிகர் வடிவேலுவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்

உடல்நலக்குறைவு காரணமாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்.
நடிகர் வடிவேலுவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்
Published on

மதுரை,

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவரது குடும்பத்தினர் மதுரையில் வசித்து வருகின்றனர்.

வடிவேலுவின் தாய் வைத்தீஸ்வரிக்கு 87 வயதாகிறது. வயது முதிர்வு காரணமாக இவரது தாயாருக்கு உடல்நலக்குறைவு இருந்து வந்த சூழலில், திடீரென நேற்று இரவு மதுரை விரகனூரில் காலமானார்.

அவரது மரணம் வடிவேலுவின் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com